தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால், இன்று காலை 8 மணிவரை ஏற்கனவே 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் டி. அபேசிறிவர்தன தெரிவித்தார்.
தெதுறு ஓயாவின் வான்கதவுகள் வினாடிக்கு 16,000 கன அடிக்கு மேல் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக புத்தளம் மற்றும் சிலாபம் மாவட்டத்தின் தெதுறு ஓயாவின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் இன்று மாலை சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.