தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

266 0

நைஜரின் மேற்கு பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைஜரின் மேற்கு பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 ராணுவ வீரர்கள் காயமுற்று இருப்பதாக அந்நாட்டு ராணுவத்தின் செய்தி தொடர்பாளரான சியோதௌ அல்தௌலா தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தி தப்பி ஓட முயன்ற தீவிரவாதிகளை பிடிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நைஜர் நாட்டு பிரதமர் இந்த தாக்குதல் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். உயிரிழிந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு தனது இரங்கலை அவர் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
நைஜரை சேர்ந்த போகோ ஹராம் என்ற இஸ்லாம் இயக்கம் கடந்த ஏழு ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. இதுவரை மொத்தம் 20,000 உயிர்களை பறித்துள்ள இந்த இயக்கம் மேற்கு ஆப்ரிக்கா மற்றும் அருகாமை நாடுகளில் ஊடுறுவி வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவில் வன்முறை சம்பவங்களுக்கு 2.6 மில்லியன் மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
முன்னதாக புத்தாண்டு நிகழ்வின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று நைஜர் வீரர்கள் கொல்லப்பட்டனர், மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் நைஜர் நாட்டின் எல்லை பகுதியில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.