இயேசுவை சந்திக்கும் நத்தார் பண்டிகையாக ஆக்குவோம்-சஜித்

127 0

அன்பையும் அமைதியையும் பகிர்ந்துகொள்ளும் பண்டிகையான நத்தார் என்ற உண்மையான கிறிஸ்தவப் பிறப்பு, அமைதியான, அன்பான இதயங்களுக்கு மட்டுமே என்பது யதார்த்தமாகும். எனவே நாம் எப்போதும் உண்மையான நத்தார் தினத்தைக் கொண்டாடுவோம்.

இந்த வருட நத்தார் பண்டிகையை  இயேசுவை சந்திக்கும் நத்தார் பண்டிகையாக ஆக்குவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நத்தார் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகில் அமைதியின் செய்தியை எடுத்துரைத்து, மனிதர்கள் அனைவரையும் தீமையிலிருந்து காப்பாற்றுவதற்காக உலகிற்கு வந்த சமாதானத் தூதரின் பிறப்பு, அதாவது குழந்தை இயேசுவின் பிறப்பு உலகம் முழுவதும் நினைவுகூரப்படுகிறது.

அன்பு, சமாதானம், சகோதரத்துவம் என்ற கருப்பொருளைக் கொண்ட, உன்னதமான நத்தார் பண்டிகை கிறிஸ்தவர்களின் சமயப் பண்டிகை மட்டுமல்லாது, இனம், மதம், குலம், நிறம், சிறியவர்கள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலுமுள்ள எண்ணற்ற மக்களால் கொண்டாடப்படும் கலாச்சார விழாவாகும்.

கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின்படி, தன்னுடைய குமாரனை உலகிற்கு அனுப்பியது, தேவனுடைய ராஜ்யத்தின் மதிப்புகள் மீண்டும் பூமியில் வாழ வேண்டும் என்று இறைவன் எதிர்பார்த்ததனாலாகும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை டிசம்பர் மாதத்தில் தேவாலயத்தில் மணிகள் ஒலிக்கச் செய்து, இயேசுவின் பிறப்பை மெழுகுவர்த்தி வழிபாடுகளுடன் கொண்டாடுகிறார்கள்.

உலகில் அனைத்து இறைதூதர்களும் ஒரு நல்ல வழியைக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்களது தர்மத்தின் சாராம்சம் சாந்தி, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் கருணையாக இருந்தது.

இன்று நாம் மிகுந்த பக்தியுடன் நினைவுகூரும் இயேசுநாதர், மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் மிகுந்த கருணையும் அன்பையும் காட்டிய அற்புதமானவர்.

பகிர்வு பற்றிய அற்புதமான பாடத்தை உலகுக்குக் கற்றுத் தந்த இறைமகன் இயேசு, மனித சுதந்திரத்தைப் பற்றி உலகிற்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொண்டு வந்தார். ஒருவரையொருவர் மதித்தல், ஒருவரையொருவர் அன்பாக நடத்துதல், அனைத்து மனித இனத்தையும் சகோதரத்துவத்துடன் நடத்துதல் ஆகிய உன்னத நற்பண்புகளை நடைமுறையில் உலகிற்கு போதித்தார்.

இயேசுநாதரின் கோட்பாடு அன்பு. எனவே, நத்தார் தினத்தை அமைதியின் பருவம் என்றும் கூறலாம். அன்பையும் அமைதியையும் பகிர்ந்துகொள்ளும் பண்டிகையான நத்தார் என்ற உண்மையான

கிறிஸ்தவப் பிறப்பு, அமைதியான, அன்பான இதயங்களுக்கு மட்டுமே என்பது யதார்த்தமாகும். எனவே, நாம் எப்போதும் உண்மையான நத்தார் தினத்தைக் கொண்டாடுவோம். ஆகவே, இந்த வருட நத்தார் பண்டிகையை நாம் இயேசுவை சந்திக்கும் நத்தார் பண்டிகையாக ஆக்குவோம்.