கட்டிட பணியாளர் ஒருவர் கீழே விழுந்து பலி

289 0

கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேசன் வீதியில் நிர்மானிக்கப்படும் கட்டிடம் ஒன்றில் பணியாற்றிய ஒருவர் அதிலிருந்து கீழே விழுந்து பலியானார்.

இன்று முற்பகல் 9.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரே சம்பவதத்தில் பலியானார்.

குறித்த கட்டிடத்திலிருந்து கிழே விழுந்து படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சீன நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடமே கொள்ளுப்பிட்டியில் நிர்மானிக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.