சன்சீ கப்பலில் 492 பேரை கனடாவுக்கு அழைத்துச்சென்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முக்கிய சந்தேகத்துக்குரியவரான தொடர்பான வழக்கு விசாரணைக்கு புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த வழக்கின் முக்கிய சந்தேக ஆளான குணரொபின்சன் கிறிஸ்துராஜா தொடர்பில் தீர்ப்பு வழங்கப்படாதநிலையில் அவர் கடந்த மாதம் பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 3 பேருடன் ஏற்கனவே 6 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
எனினும் ஏனைய மூவரும் வழக்கில் ,ருந்து விடுவிக்கப்பட்டநிலையில் சன்சீ கப்பலின் சொந்தக்காரராக குற்றம் சுமத்தப்பட்ட கிறிஸ்துராஜா தொடர்பில் அறங்கூறுநர்கள் தீர்ப்பு எதனையும் வழங்கவில்லை.
இந்தநிலையிலேயே அவர் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்ரும் மே மாதத்தில் மீண்டும் இடம்பெறவுள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.