பெண்களுக்கு எதிராக தற்போது அதிகரித்துவரும் வன்முறைகளை தடுப்பதற்காக தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மகளிர் தொடர்பில் செயற்படுவதற்கு இலங்கையில் பல அமைப்புக்கள் காணப்படுகின்றன.
எனினும், பெண்களுக்கு எதிராக தற்போது அதிகரித்துவரும் வன்முறைகளை தடுப்பதற்காக அவற்றுக்கு சட்ட ரீதியிலான அதிகாரம் இல்லை.
இந்த நிலையில், சட்ட அதிகாரம் பொருந்திய தேசிய மகளிர் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டாரவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.