சிறுநீரக நோய்க்கு மருந்தாக பயன்படு;தப்படும் கடல் உரோஞ்சு பட்டைகளுடன் சீன நாட்டு பொதுமகன் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
16 கடல் உரோஞ்சு பட்டைகளை சீனாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது, நேற்று மாலை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடல் உரோஞ்சு பட்டைகளின் பெறுமதி ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாவாகும்.
கைப்பற்றப்பட்ட கடல் உரோஞ்சு பட்டைகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர், மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டத்தில் பணிபுரிபவர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.