இலங்கையின் புலனாய்வு அதிகாரிகள் சிலர் அகதிகளைத் தேடி ஹொங்கொங் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங் ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய நான்கு அகதிகள் குறித்த தகவல்கள் அண்மையில் வெளியாகியுள்ளன.
குறித்த நால்வரில் இலங்கையர்களும் உள்ளடங்குகின்றனர்.
அவர்களைத் தேடியே குறித்த புலனாய்வாளர்கள் அங்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் ஹொங்கொங் காவற்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று அகதிகள் தொடர்பான சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர்.