சசிகலா ஆயுள் கைதியாக வேண்டிய நிலை ஏற்படும் – மு. க. ஸ்டாலின்

271 0

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினால், சசிகலா ஆயுள் கைதியாக வேண்டிய நிலை ஏற்படும் என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெற்றபோது திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தால் நேற்று தமிழகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட உண்வு தவிர்ப்பு போராட்டத்தின்போதே ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ;. பன்னீர்செல்வமும் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விசாரணைக்கு உத்தரவிடவில்லை.

இந்த ஆட்சி நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய ஆட்சி அல்ல.

இந்த ஆட்சி மக்களால் தூக்கி எறியப்படும்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தால், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.