பாதுகாப்பு படையினரின் வசம் எஞ்சி இருக்கும் தனியார் காணிகள் எப்போது விடுவிக்கப்படும் என்பது தொடர்பான காலக்கெடு ஒன்றை வழங்குமாறு இராணுவத்திடம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால் இந்த காலக்கெடு கோரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் தகல்களின்படி, 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை கணிசமானளவு தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
4 ஆயிரத்து 162 ஏக்கர்காணிகள் விடுக்கவிக்கப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.