துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நாயகம் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நாயகம் விமல்ராஜ் நேசன் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர்.
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று பிற்பகல் 7 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உந்துருளியில் சென்ற இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த மாவட்ட பணிப்பாளர் நாயகம் விமலராஜ் நேசன் சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி மற்றும்;. மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.