ஊடகவியலாளர் கீத் நொயாரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கல்கிஸ்ஸ மேலதிகநீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்சந்தேகநபர்களை அடையாளம் காட்டுவதற்கே அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறுநீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 03ம் திகதி இடம்பெறவுள்ள அடையாள அணிவகுப்பின் போதுசந்தேகநபர்களை அடையாளம் காட்டுவதற்கு கீத் நொயாரை நீதிமன்றில்முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதவான்அறிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐந்துஇராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிர் அச்சுறுத்தலுக்கு பயந்து கீத் நொயார் தன் குடும்பத்துடன் நாட்டை விட்டுதப்பிச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.