நாட்டில் சகவாழ்வு எற்பட வேண்டுமாயின் மன்னிப்பு மறப்பு அவசியமானதென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டினார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான செயலகத்தினால் யாழ்;ப்பாணத்தில் நடாத்தப்பட்ட நல்லிணக்கச் செயலமர்வின் இறுதி நாள் நிகழ்வில் உரையாற்றும் பேர்து இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் தெற்கு மற்றும் வடக்கில் இனவாத அரசியல் தலைமைத்துவம் தற்போதும் காணப்படுகிறது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மாணவர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மன்னிப்பு முக்கியமானது என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் அடுத்த கட்ட நகர்விற்கு மன்னிப்பு மருந்தாகும் என்றும் குறிப்பிட்டார்.