தமிழ் மக்களாகிய நாம் தேசிய ஒருமைப்பாட்டையே விரும்புகின்றோம்- சீ.வி.கே.சிவஞானம்(காணொளி)

333 0

சிங்கள மக்களுக்கான வாழ்வு முறையைப் போன்று தமிழ் மக்களுக்கான தனித்துவத்தை அங்கீகரிக்கின் போது இன நல்லிணக்கமானது தானாக ஏற்படும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான செயலகத்தினால் யாழ்;ப்பாணத்தில் நடாத்தப்பட்ட நல்லிணக்கச் செயலமர்வின் இறுதி நாள் நிகழ்வில் உரையாற்றும் பேர்து இதனைக் குறிப்பிட்டார்.

இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நிகழ்வு வடக்கு, தெற்கு பாடசாலை மாணவர்கள் மத்தியில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைக் கல்லூரியில் நடைபெற்றது.

தமிழ் மக்களாகிய நாம் தேசிய ஒருமைப்பாட்டையே விரும்புகின்றோம் அத்துடன் தமிழ் மக்களின் தனித்துவத்தைப் பேணி இணக்கப்படாக வாழலாம் என்று எதிர்பார்க்கின்றோம் இருந்த போதிலும் கடந்த 30 ஆண்டு கால போராட்டத்தின் வடுக்களை எம்மால் மறக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல ஆனால் சிங்கள அரசியல்வாதிகளின் செயற்பாடுகளையே வெறுக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.

நல்லிணக்க செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் எமது நல்லிணக்க செய்தியை தெற்கு மக்கள் மத்தியிலே கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாண கல்லூரியில் நல்லிணக்க செயலமர்விற்கு வடக்கிலிருந்து 100 மாணவர்களும், தெற்கிலிருந்து 100 மாணவர்களும் வருகைதந்து கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள 25 பாடசாலை மாணவர்களும், மேல் மாகாணத்திலிருந்து 16 பாடசாலை மாணவர்களுமாக 200 மாணவர்கள் 20 ஆசிரியர்கள் மற்றும் வளவாளர்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வானது வடக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் அனுசரனையுடன் யாழ்ப்பாணத்தில் கடந்த 19 அம் திகதியிலிருந்து 5 நாள்கள் நல்லிணக்க செயற்பாடுகள் நடைபெற்றன.

நல்லிணக்க செயலணியின் இறுதிநாள் நிகழ்வில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க செயலகத்தின் உத்தியோகத்தர்கள், வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.