முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று (21) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாதீட்டு விசேட அமர்வானது இன்று காலை பிரதேச சபையினுடைய தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் அவர்களுடைய தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது சபையில் ஆறு உறுப்பினர்கள் சமூகமளிக்காத நிலையில் 17 உறுப்பினர்கள் மத்தியில் பிரதேச சபையினுடைய தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் அவர்களால் இந்த பாதீடு சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது அனைத்து உறுப்பினர்களினுடைய ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் 2023 ஆண்டுக்கான பாதீடு இன்று நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.