மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ரோட்டரி கழகம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட மாபெரும் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ரோட்டரி கழகம் இணைந்து மாதாந்தம் பல சமூக பணிகளை முன்னெடுத்துவருகின்றன.
இதன்கீழ் இன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00மணி வரை மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜா தலைமையில் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர், தாதியர்கள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.