முல்லைத்தீவு முறுகண்டி பகுதியில் கடமையில் இருந்த பிரதேச சபை சாரதி ஒருவர் மீது குறிப்பிட்ட சிலர் வாள்வெட்டு தாக்குதலை 12.12.2022 அன்று நடத்தியிருந்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள ஒலுமடு ஊப அலுவலகத்தில் பணியாற்றும் உழவு இயந்திரத்தின் சாரதியே வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
32 அகவையுடை மந்துவில் பகுதியில் வசித்துவரும் பிரதேச சபையில் பணியாற்றும் சாரதியான அன்ரன் பரமதாஸ் துசான் என்ற சிற்றூழியரோ வாள்வெட்டுக்கு இலக்காகியிருந்தார்.
வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் செவ்வாய்க்கிழமை (20) மாங்குளம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த தாக்குதலை கண்டித்து குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்யகோரியும் அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யகோரியும் கடந்த 13 ஆம் திகதியன்று புதுக்குடியிருப்பு பிரதேச சபை உத்தியோகத்தர்கள் உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மாங்குளம் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய கோணாவில் யூனியன்குளம் பகுதியை சேர்ந்த 23 வயது குடும்பஸ்தர் ஒருவரையும் ,கிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரையும் செவ்வாய்க்கிழமை (20) கைது செய்திருந்தனர் , இதேவேளை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாள் ஒன்றினையும் கைப்பற்றி இருந்தனர்
இவர்களை புதன்கிழமையன்று (21) மாங்குளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இருவரையும் 2023 ஜனவரி 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.