மட்டக்களப்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்(காணொளி)

351 0

 

மட்டக்களப்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேற்று இரவு களுதாவளையில் வைத்து காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் விமல்ராஜ் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

குற்றவாளிகளை உடனே கைதுசெய், அலுவலர்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றோம் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.

இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் ஊடகங்கள் கருத்து கோரியபோது, அச்சம் காரணமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க எவரும் முன்வரவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.