புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று புதன்கிழமை (21) காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையில் Bromin புரோமின் என்ற இரசாயன குவளை உடைந்ததன் காரணமாக இரசாயனம் ஆய்வுக்கூடம் முழுவதும் பரவியுள்ளது.
இதனால் அங்கிருந்த ஐந்து மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில் புஸ்ஸல்லாவ வகுக்கப்பட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
நிலமையினை கட்டுப்பாட்டு கொண்டு வரும் நோக்கில் கண்டி தீயணைக்கும் பிரிவினர் பாடசாலைக்கு விரைந்துள்ள அதே நேரம் இரசாயனத்தை அப்புறப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஏனைய மாணவர்களை பாடசாலை நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தியுள்ள அதே நேரம் அவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விரைந்து செயல்பட்ட பாடசாலை அதிபர் கம்பளை கல்விவலயத்திற்கும் , மாகாண கல்விபணிமனைக்கும் புஸ்ஸலாவ பொலிஸாருக்கும் உடனடியாக அறிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ பொலிஸார் கம்பளை பொலிஸ் அத்தியட்சகருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.