தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 45 லட்சம் ரூபா மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு பொலிஸாரால் புதன்கிழமை (டிச.21) கைப்பற்றியுள்ளனர்.
தூத்துக்குடி புல்லாவெளி கடற்கரையில் இன்று (டிச.21) அதிகாலை 4 மணியளவில், க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கடற்கரையில் நின்று கொண்டிருந்த லொறியை சோதனையிட்டனர்.
அதிலிருந்த சுமார் 1½ தொன் எடையுள்ள பீடி இலைகள் மற்றும் லொறியும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. (இலங்கை மதிப்பு 45 இலட்சம் ரூபா).
தொடர்ச்சியாக பீடி இலைகள் இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது. இந்த பீடி இலைகளை சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.