அக்கரப்பற்று நீதிமன்ற வளாகத்தின் மேல்மாடியில் இன்று (21) அதிகாலை 4.10 மணியளவில் திடீரென தீ பரவியதாக அக்கரப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய கட்டிடத்தில் தீப்பற்றியதை முதலில் கவனித்த காவலாளி ஒருவர், நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸாருடன் இணைந்து அக்கரப்பற்று நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கைரேகை பிரிவு உள்ளிட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்