புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்கள் – சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

295 0

சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் நேற்று அறிவித்தனர். இதை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனமானது சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

வரலாற்றில் முதன் முறையாக நம்முடைய சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் என்றே தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்பை பாராட்டும் விதாமாகவும், புதிய கோள்கள் கண்டறியப்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவும் பிரபல தேடுபொறி தளமான கூகுள் நிறுவனமானது, சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. கூகுள் முகப்பு பக்கத்தை இந்த சிறப்பு டூடுல் அலங்கரித்துள்ளது.
அந்த சிறப்பு டூடுலை கிளிக் செய்தால் புதிதாக கண்டறியப்பட்ட கோள்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.