நிலக்கரி இருப்புக்களை விரைவாக இறக்குமதி செய்ய முடியாத பட்சத்தில் ஜனவரி மாதத்திற்குள் மின்வெட்டு மேலும் அதிகரிக்கக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்திற்கு 38 நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டியிருந்தாலும், இதுவரை 06 நிலக்கரி கப்பல்களே இலங்கைக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு மற்றும் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் சிவில் அமைப்புகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனக ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.