லாகூரில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி – 20 பேர் காயம்

286 0

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானில் தீவிரவாதி ஹபீஸ் சயீதுக்கு எதிராக, அந்நாட்டு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீதுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசு மீது தீவிரவாதிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். இன்று மதியம் தீவிரவாதிகள் லாகூர் நகரில் திடீரென கைவரிசையைக் காட்டினார்கள்.

லாகூரில் உள்ள பிரதான மார்க்கெட்டில் அடுத்தடுத்து சில இடங்களில் குண்டுகள் வெடித்தது. இதில் கட்டிடங்கள், வாகனங்கள் சிதறின. குண்டு வெடிப்புகளில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடந்த இடம் அருகே ராணுவ மையம் உள்ளது. அந்த ராணுவ மையத்தை தகர்க்க திட்டமிட்ட தீவிரவாதிகள் மார்க்கெட்டில் குண்டு வெடிப்பை நடத்தி உள்ளனர்.