விமல் வீரவங்ச எழுத்து மூலம் கோரினால் ஆராய தயார் – மஹிந்த அமரவீர

255 0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வீமல் வீரவங்ச, நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்படுவது தொடர்பான சபாநாயகர் தீர்மானம் எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது.

கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட அந்த கட்சியின் உறுப்பினர்கள் 5 பேர் சுயாதீனமாக நாடாளுமன்றத்தில் செயற்பட வேண்டும் என நேற்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு  அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இன்றைய தினம் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதனிடையே, அவ்வாறான ஒரு கோரிக்கை எழுத்து மூலம் தமக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில், எந்த தருணத்திலும் அது குறித்து ஆராய தாம் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றல் வைத்து இன்று குறிப்பிட்டார்.