கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்திதிறன் செயற்பாடுகளை புத்தள மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பார்வையிட்டனர்.

312 0

கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்திதிறன் செயற்பாடுகளை புத்தள மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இன்று  பார்வையிட்டுள்ளனர்.

தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் அரச அலுவலகங்கள் ரூபவ் தனியார் நிறுவனங்கள் மற்றும் பாடசலைகள் என பல நிறுவனங்களுக்கிடையே ஆண்டுதோறும் உற்பத்தி திறன் போட்டி நடைபெற்று வருகின்றது.

இப்போட்டியில் 2015ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட செயலகம் முதன்முறையாக போட்டியிட்டு அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமையினையிட்டு அண்மைக்காலமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பாடசலைகள் என பல அமைப்புகள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினை பார்வையிட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் இன்று மாவட்ட செயலகத்தின் உற்பத்தி திறன் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான வினைத்திறனுடன் கூடிய சேவையினை பார்வையிடுவதற்காகவும் ரூபவ் செயலக பணியாட்தொகுதியுடனான அனுபவப்பகிர்வினை மேற்கொள்ளும் பொருட்டும் புத்தள மாட்ட அரசாங்க அதிபர் திரு என்.எச்.எம்சித்ராநந்த அவர்களது தலைமையில் 40ற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்ட  செயலகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டு அலுவலக உற்பத்தி திறன் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் அலுவலர்களுடன்

கலந்துரையாடி அனுபவங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்படி உற்பத்தி திறன் போட்டியில் அதே ஆண்டில் புத்தள மாவட்ட செயலகம் 3ஆம் இடத்தினை  பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.