நாட்டில் தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக இலங்கை பொதுமக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணியினர் ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாகவே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொலை அச்சுறுத்தல் காணப்படுகின்றது.
இவ்வாறு மீண்டும் பயங்கரவாதம் நாட்டில் தலை தூக்க 4 புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் சம்பந்தப்பட்டிருப்பதுடன், அவர்களே குறித்த சதி முயற்சிக்கு பணம் அனுப்பியுள்ளார்கள்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபரையும் அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்படவில்லை,
மாறாக இவர்கள் சாதாரண முறையிலேயே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதன் காரணமாகவே அவர்களது விசாரணைகளுக்கு இடையூறுகளும் காணப்படுகின்றது.
இவ்வாறு பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்கின்றபோது பயங்கரவாத தடை சட்டத்தினை பிரயோகிக்காத அரசாங்கம் புலனாய்வு துறையினரை கைது செய்யும் போது மட்டும் பயன்படுத்துகின்றது என ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியிருந்தார்.