கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தேசிய நல்லிணக்கத்திற்கான முற்போக்கு பேரவை காத்தான்குடியில் கவயீர்ப்பு போராட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் ஜாமியுழ்ழாபிரீன் ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்னாலுள்ள மார்கட் சதுக்கத்தில் இந்த பேரணியை நடத்த ஒழுங்குகள் நடத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அவலங்களை கருத்திற்கொண்டு அனைத்து மக்களும் இதில் பங்கேற்று அவர்களின் போராட்டத்திற்கு பலம் சேர்க்க வேண்டுமென பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.