சில மாதங்களில் 5 இலட்சம் வேலை வாய்ப்புக்கள்

263 0

எதிர்வரும் சில மாதங்களில் ஐந்து இலட்சம் வரையான வேலை வாய்ப்புக்கள் இளைஞர், யுவதிகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டத்திற்கு அமைய இந்த வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.

மட்டக்குளிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.