தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் இன நல்லிணக்கம் இன ஒற்றுமைக்கு எதிரானவர்கள் இல்லை என்று தெரிவித்தார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் வடமாகாண சபையின் அவைத்தலைவருமாகிய சீ.வி.கே.சிவஞானம்.இன்றைய தினம் யாழ் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியில் இடம்பெற்ற வடக்கு-தெற்கு பாடசாலை மாணவர்களை இணைத்து நடாத்தப்பட்ட சகோதர பாடசாலை நிகழ்வின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 30 வருட போரை யாரும் மறந்துவிடமுடியாது எனினும் தமிழருக்குரிய கலை கலாசாரம் பண்பாடு போன்றவற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலை வரும் போது நாட்டில் சமாதானம் என்பது தானாகவே உருவாகும் அதனை புரிந்து செயற்படவேண்டும் என தெரிவித்த சி வி கே சிவஞானம் எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் நான் உறுப்பினராகவுள்ளேன் நாம் இன ஒற்றுமையோ இன நல்லிணக்கத்தையோ இன ஒருமைப்பாட்டையோ எதிர்த்ததில்லை என்று குறிப்பிட்டார்.