பகிடிவதை குறித்து முறையிட மாணவர்களுக்கு வாய்ப்பு

392 0

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை இணையத்தின் ஊடாக முன்வைப்பது குறித்து விஷேட வேலைத் திட்டத்தை செயற்படுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

24 மணித்தியாலங்களும் செயற்படக் கூடிய தொலைபேசி இலக்கம் ஒன்றை இதன் பொருட்டு அறிமுகப்படுத்தியுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி பகிடிவதை மட்டுமல்லாது பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் முகம் கொடுக்கும் அனைத்து சித்திரவதைகள் தொடர்பிலும் முறையிட மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

இதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பிரிதொரு பிரிவையும் நிறுவியுள்ளனர்.

011 212 3456 என்ற இலக்கத்திற்கு அல்லது www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து எந்த நேரத்திலும் தமது பிரச்சினைகள் குறித்து கூற முடியும் என மொஹான் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.