கடந்த ஆண்டு பொலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விபத்துக்குள்ளாகி மரணமடைந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
யாழ் நீதிமன்ற பதில் நிதிபதி v.t சிவலிங்கம் முன்னிலையில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொலீசார் ஆயர்படுத்தப்பட்டனர்.சந்தேக நபர்களை எதிரவரும் மார்ச் 9 வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிபதி உத்தரவிட்டார்.