கடல் மார்க்கமாக சட்டத்திற்கு முரணாக இந்தியாவிற்கு செல்ல முயற்சித்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அனுமதியின்றி கடல் மார்க்கமாக இந்தியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிலர், தலைமன்னார் பகுதியில் தங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய தலைமன்னார் கடற்படைனரால் சனிக்கிழமை (டிச.17) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 22 – 58 வயதுக்கு இடைப்பட்ட பேசாலை, வவுனியா மற்றும் திருகோணமலை பிரதேசங்களை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இவர்களில் 16 மற்றும் 41 வயதுடைய பேசாலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர்.
தலைமன்னார் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.