புதிய தொழிநுட்பத்திற்கு ஏற்றாற் போல் சமுர்த்தி வங்கிகளை நவீனப்படுத்தவுள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடுவலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
வறிய மக்களுக்கு சமுர்த்தி வங்கிகள் மூலம் கடன்களை வழங்கும் வேலைத்திட்டத்தை ஒழுங்குபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.