மன்னார் சிலாவத்துறையில் நீரில் மூழ்கி ஒருவர் பலி

266 0
மன்னார் சிலாவத்துறைக் கடலில் நேற்றைய தினம் தந்தையுடன் நீச்சல் பழகச்   சென்ற இளைஞன் ஒருவர் கடலில் மூழ்கியதில் பரிதாப கரமாக உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்தினில்  சிலாவத்துறையை சேர்ந்த 21 வயது இளைஞனான.       இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இது குறித்து மேலும் தெரிய வருவது ,
மன்னார் சிலாவத்துறைக் கடலிற்கு குறித்த இளைஞன்  நேற்றைய தினம் தந்தையுடன் நீச்சல் பழகச்   சென்றுள்ளார். இவ்வாறு சென்ற இளைஞனுக்கு தந்தை கடலில் நீச்சல் பயிற்சி வழங்கியுள்ளார். அவ்வாறு பயிற்சி வழங்கி கொண்டிருந்த சமயம் தந்தையாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு மாரடைப்பு ஏற்பட்டதனால் தந்தையார் திடீரென நெஞ்சை பொத்தியவாறு வீழ்ந்துள்ளார்.
குறித்த சமயம் இளையன் கடலில்  மூழ்கியதினாலேயே இவ்வாறு  பரிதாப கரமாக உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் ஏனையோரால் தந்தை காப்பாற்றப்பட்டதோடு மூழ்கிய இளைஞனையும் மீட்டுள்ளனர். இருப்பினும் இளகஞன் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மேலதிக விசாரணைக்காக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.