கைதடிப் பகுதியில் வீட்டில் நெல் காய வைத்துவிட்டு காவலில் நின்ற முதியவரை குரங்கு கடித்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தினில் கைதடி வடக்கினைச் சேர்ந்த த.கணபதிப்பிள்ளை , வயது – 60 என்பவரே இவ்வாறு குரங்கு கடிக்கு இலக்கான நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பினில் மேலும் தெரிய வருவது ,
கைதடி வடக்குப் பகுதியில் உள்ள தனது வீட்டில் அறுவடை செய்த நெல்லை உளர வைத்துக்கொண்டிருந்த வேளையில் சில குரங்குகள் அப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளது. அதனை அவதானித்த முதியவர் முதியவர் குரங்கிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் அங்கிருந்து விலகிச் செல்ல முற்பட்டுள்ளார். இருப்பினும் அவ்வாறு நுழைந்த குரங்கு கூட்டத்தினில் ஓர் குரங்கு முதியவரை பலமாக கடித்துள்ளது.
இவ்வாறு குரங்கு கடிக்கு இலக்கான முதியவர் உடனடியாக உறவுகளின் துணையுடன் ஓர் முச்சக்கர்வண்டியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.