வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பால் நோயாளர்கள் அவதி

276 0

சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை தொடக்கம் வைத்தியர்கள் இந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவினை தவிர வெளிநோயாளர் பிரிவு உட்பட அனைத்து பகுதிகளினதும் செயற்பாடுகள் நடைபெறவில்லை.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதேவேளை வடமத்திய மாகாணத்திலும் இந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டம் இடம்பெறுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஹரித அளுத்கே கூறினார்.