செயற்திறன் அற்ற சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் விரைவில் நீக்கப்படும் – ஜனாதிபதி

255 0

தேர்தல்களை நடத்த தாம் அஞ்சியதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

தேர்தல் எவ்வாறு நடத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். கட்சியை ஆயத்தப்படுத்தும் பணிகளை நீங்கள் செய்யுங்கள்.

எந்தவிதமான பணிகளையும் ஆற்றாத தொகுதி அமைப்பாளர்கள் விரைவில் மாற்றப்படுவர். கட்சியின் ஒழுங்கமைப்பு பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்

கூட்டங்களை நடத்தி மக்களை மக்களை காண்பித்து தேர்தலை வெற்றியீட்ட முடியும் என எவரேனும் கருதினால் அது நகைப்பிற்குரியது.

எங்களது தொகுதி அமைப்பாளர் ஒருவர் விலகியமை குறித்து பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதனை யார் செய்கின்றார்கள் எவ்வாறு செய்கின்றார்கள் என்பது எனக்குத் தெரியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்