தேசிய அரசியல் தலைவர்கள் அனைவரையும் சிறையில் வைத்தால் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
விமல் வீரவங்சவை விடுதலை செய்யுமாறு கோரி நேற்று ஹேமாகாம நகரில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதில் ஒன்றிணைந்த எதிர்க் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.