புதிய பாலம் ஒன்றை நிர்மாணிக்கவுள்ளதால் கரையோர புகையிரத பாதையில் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளைக்கு இடையிலான பகுதி இன்று இரவு 10.00 மணி முதல் இந்த மாதம் 27 ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
இதன்படி மாத்தறை காலி மற்றும் அளுத்கமயில் இருந்து வரும் புகையிரதங்கள் தெஹிவளை புகையிரத நிலையம் வரை மட்டுமே பயணிக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து வரும் புகையிரதங்கள் வெள்ளவத்தை புகையிரத நிலையம் வரை மாத்திரமே பயணிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது