மாலம்பே தனியார் மருத்துவப் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டுமொரு தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்ல அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தில் இன்றைய தினம் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மேலதிக செயலாளர் மருத்துவர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்