மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக சுமார் 271 மாடுகள் இறந்துள்ளன.
இருப்பினும் மாடுகளுக்கு எவ்வித நோய்களும் இல்லை என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக மாவட்ட கால்நடை அபிவிருத்தி திணைக்கள பிரதி பணிப்பாளர் டாக்டர் உதயராணி குகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இறைச்சி வகைகளை உணவாக உள்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளதகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.