ஐந்தாயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்று கொண்ட குற்றச்சாட்டுக்கு அமைய நுகெகொட சுகாதார மருத்துவ அதிகார சபையில் கடமையாற்றிய சுகாதார பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இலஞ்ச ஆணைக்குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடஹாமுல்ல பிரதேசத்தில் கட்டிட நிர்மாணம் செய்யும் இடத்தில் நுளம்பு முட்டைகள் இருப்பதாக கூறி அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு ரூபாய் 5 ஆயிரம் பணத்தை சந்தேக நபர் கோரியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.