ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட தேசிய சுதந்திர முன்னணி சபாநாயகரிடம் மேற்கொண்ட கோரிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்றில் தீவிர நிலை ஏற்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட தமது முன்னணி மேற்கொண்டிருந்த கோரிக்கை தொடர்பில் சபாநாயகரின் தீர்மானம் என்னவென்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று வினவியிருந்தார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அதனுடன் தொடர்பான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தாக விமல் இதன் போது தெரிவித்திருந்தார்.
அதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தீவிரநிலை ஏற்பட்டது.