இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஐக்கிய மக்கள் சக்திக்குள் எழுந்துள்ளதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்ட பின்னர் அவரது ஆசனத்திற்கான வெற்றிடத்தில் யாரை நியமிப்பது என்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.
இந்நிலையில் டயனா கமகேவின் வெற்றிடத்திற்கு முன்னாள் எம்.பியான ஹிருணிகா பிரேமச்சந்திரவை நியமிக்க அவருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் ஹிருணிகா அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என தெரிய வருகின்றது. இந்நிலையில் முன்னாள் எம்.பியான சந்திராணி பண்டாரவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.