வடக்கு தவிர , ஏனைய பகுதிகளில் இறைச்சி விநியோகங்களை மேற்கொள்ள அனுமதி

110 0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த வாரம் உயிரிழந்த ஆடுகள் மற்றும் மாடுகளின் இறப்பிற்கு காரணம் கடும் குளிருடனான காலநிலை என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் கால்நடைகளின் உயிரிழப்புக்களின் எவ்வித தொற்று நோயும் தாக்கம் செலுத்தவில்லை.

எனவே வட மாகாணம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலிருந்தும் இறைச்சி போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த இரு வாரங்களாக நிலவிய கடும் குளிருடனான காலநிலை காரணமாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் சுமார் 1600 கால்நடைகள் உயிரிழந்தன.

இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடந்த 10 ஆம் திகதி மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.