இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய வளர்ச்சித் துறைகளில் காணப்படும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள தேசிய சமூக ஊடக பிரச்சார நிகழ்வு தொடர்பான அறிவிப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள இந்த சமூக ஊடக பிரச்சார நிகழ்வு, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சு, சிவில் சமூக நிறுவனங்கள், சர்வதேச நன்கொடையாளர்கள் மற்றும் தனியார் நிறுவங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளது.
இப் பிரச்சார நிகழ்வுக்கான ஆரம்ப முதலீட்டை கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை (WUSC) அமைப்பினூடாக கனேடிய அரசு வழங்கி வருகின்றது.
இந்நிகழ்வில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, கனேடிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதி க்ளோவ்ட் கௌலட் (Claude Goulet) மற்றும் ஏனைய பிரதான பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.