உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஆணை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று (16) அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.