மின் உற்பத்திக்கு கூடுதல் செலவுகள் – மின்சாரசபை

316 0

நாட்டில் நிலவுகின்ற மழையற்ற காலநிலை காரணமாக மின் உற்பத்திக்கு கூடுதல் செலவுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும் தடையின்றி தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு முயற்சித்து வருவதாக இலங்கை மின்சாரசபை குறிப்பிட்டுள்ளது.

எனினும் தொடர்ந்து மின்சாரம் வழங்க முயற்சிப்பது என்பது சவாலான விடயமாகும் என மின்சாரசபையின் தலைவர் அநுர விஜேபால தெரிவித்துள்ளார்.

நூற்றில் 10 வீதமாவது மின்சாரத்தை மீதப்படுத்துவதென்பது தற்போது அவசியமான விடயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நீர்த்தேக்கங்களில் தற்போது வரையில் அதிகமான நீர், பயிர்ச்செய்கை மற்றும் குடிநீருக்காக வழங்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.