பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம்

290 0

தெல்தெனிய, திகனை பிரதேசத்தில் பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலீசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிசாரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாகப் பொலீசார் மேலும் தெரிவித்தனர்.

போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸார் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்துள்ளனர். எனினும் குறித்த மோட்டார் சைக்கிள் உத்தரவை மீறி சென்றுள்ளது இதனால் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இச்சம்பவத்தில் காயமடைந்து தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த நபர்கள் இருவரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில் பொலிசாரால் தேடப்பட்டு வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் தெல்தெனியப் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.